Home Contact Us



ஶ்ரீமந் நாராயணரின் அன்புக் கொடி! 



அன்புக் கொடி



ஶ்ரீமந் நாராயணரின் அன்புக் கொடி!

கல்கி-மகா-அவதாரம் தம் அன்புக்கொடியை பூமியில் ஏற்றுகிறார்!!!



1. கல்கி-மகா-அவதாரம்:

நாம் கடைசி யுகமாகிய கலி-யுகத்தின் முடிவில் வாழ்கிறோம். அதர்மம் நிறைந்த இந்தக் காலத்தில் தர்மத்தை ஸ்தாபிக்க எப்போது பகவான் கல்கி-மகா-அவதாரம் எடுப்பார் என்று ஏங்கிக் கொண்டிருந்த நமக்கு ஒரு நற்செய்தி! எல்லா மத புனித வேதங்களின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுபகராக, ஶ்ரீமந் நாராயணர் தமது என்றும் அழியாத சொந்த வடிவத்தில் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற மகிமையான திருநாமத்தில் கல்கி-மகா-அவதாரமாக, (தாமிரபரணி நதிக்கரையில் வந்து விட்டார்.

2. தெய்வீக ஆட்சி ஏன் வர வேண்டும்?

இன்று உலகத்தில் அமைந்துள்ள ஜனநாயக ஆட்சி, கம்யூனிச ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, ராஜாக்கள் ஆட்சி, ராஜாக்கள் ஆட்சி, மதத்தலைவர்கள் ஆட்சி ஆகிய அனைத்து முறைகளும் கொடுமை, வன்முறை, சண்டை, பயங்கரம் என்று செயல் இழந்து விட்டது! நாட்டில் எங்கும் வறட்சி, பஞ்சம், பட்டினி மிகுந்து விட்டது! ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்று பல பிரிவினைகளால் மக்கள் தினந்தோறும் சண்டையிட்டு அழிந்து கொண்டிருக்கின்றார்கள்! இதற்கு விடிவு காலம் கிடையாதா? நிச்சயமாக உண்டு! ஶ்ரீமந் நாராயணரின் தெய்வீக ஆட்சியே இந்த கொடுமைகளுக்கெல்லாம் விடிவு காலம்!

3. ஶ்ரீமந் நாராயணரின் தெய்வீக ஆட்சி வந்து விட்டது!

அகில அண்டங்களையும், அனைத்து ஜீவ ராசிகளையும், ஐந்து தொழில்களால் பரிபாலித்து வரும் மகா ராஜாவாக விளங்குபவர் ஶ்ரீமந் நாராயணர். இதே ஆதி நாராயணர் இப்போது பூமியில் இருப்பதினால் இவரை ராஜாதி ராஜாவாக முடிசூட்டி, மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது பக்தர்களின் அரும் பெரும் பாக்கியம். அகில உலக பக்த கோடிகள் மகிழ்ந்திடவும், பரலோக சேனை வாழ்த்திடவும், பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களுக்கு பக்தர்களால் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது!

ஆகையால் இனி கடவுளை நம்பும் எந்த ஒரு பக்தரும் கலலையடைய வேண்டியதில்லை. ஏனென்றால், அன்று முதல், இந்த உலகத்தில், ஶ்ரீமந் நாராயணரின் சத்திய யுகம் (தெய்வீக ஆட்சி) வந்து விட்டது! நீதியின் யுகம் தொடங்கிவிட்டது!

4. மகா விஷ்ணு ஶ்ரீ லஹரி கிருஷ்ணா ஏற்றிய அன்புக் கொடி:

புராணங்களில் பகவானின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு தெய்வீகக் கொடி இருந்ததாக கூறப்பட்டுள்ளத. திரேத்த யுகத்தில் ஶ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மரம் பொறிக்கப்பட்ட கொடியினையும், துவாபர யுகத்தில் ஶ்ரீ கிருஷ்ணர் கருட கொடியையும் உடையவர்களாக விளங்கினர். தற்கால உலகிலும் ஒரு தேசத்தின் அரசாட்சியின் சின்னமாக கொடி அமைந்துள்ளது. எத்தனையோ கொடிகள் தெய்வீகக் கொடிகளாக ஏற்றப்படலாம், ஆனால் விஷ்ணு-சக்கிரத்தை சின்னமாக பொறிந்து பறக்கவிட ஶ்ரீ மகா விஷ்ணுவிற்கு தான் உரிமை உண்டேயல்லாது, மானிடர் யாருக்கும் உரிமை உண்டேயல்லாது, மானிடர் யாருக்கும் உரிமை கிடையாது!

ஆகவே நீதியின் யுகம் வந்து விட்டபடியால், ஶ்ரீ மகா விஷ்ணு, ஶ்ரீ லஹரி கிருஷ்ணா, தம்முடைய சுதர்சன சக்கரம் (ஶ்ரீ விஷ்ணு சக்கரம்) கொண்ட அன்புக் கொடியினை தம்முடைய அரசாட்சியின் சின்னமாக ஏற்றியுள்ளார்கள்! இந்த சின்னத்தின் சக்தியினை நன்கறிந்திருந்த முகலாய அரசர் அக்பரும், தம்முடைய கேடயத்தில் இதை பொறித்திருந்தார்! பேரரசராக திகழ்ந்தார்! ஶ்ரீ வைகுண்டத்தில் அன்று பறந்த கொடியும் இதுவே!

5. அன்புக் கொடி அமைப்பு:

நமது தேசிய கொடியின் நீள அகலங்களை கொண்டது இந்தக் கொடி. இது காவி நிறம் கொண்டது. கொடியின் நடுவில் விஷ்ணு சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு சக்கரத்தை சுற்றி ஏழு நிறங்களைக் கொண்ட வானவில் உள்ளது. விஷ்ணு சக்கரத்தில் மத்தியில் வெண்ணிற சூரியன் பிரகாசிக்கின்றது. கொடியின் பச்சை பட்டைக் கோடும் அமைந்துள்ளது.

6. அன்புக் கொடியின் தாத்பரியம்:

பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா தாம் ஏற்றிய அன்புக் கொடியின் தாத்பரியத்தை தாமே கூறியுள்ளார். கொடியின் காவி நிறம் புருஷ-ஸுக்தத்தில் கூறப்பட்டுள்ள ஆதி மகா யக்ஞத்தை குறிக்கிறது. கொடியின் மேல் பாகத்தில் உள்ள வெள்ளை பட்டை இறைவன் நமக்கு எந்த சுயமுயற்சியுமின்றி இலவசமாக அருளிய தேவ நீதியைக் குறிக்கிறது. கீழ் பாகத்திலுள்ள பச்சை பட்டை சக்தியத்தையும் சமாதானத்தையும் குறிக்கிறது. சத்தியம் தழைத்தோங்கினால்தான் சமாதானத்தையும் குறிக்கிறது. சத்தியம் தழைத்தோங்கினால்தான் உண்மையான சமாதானம் நிலவ முடியும். கொடியின் மத்தியில் உள்ள விஷ்ணு-சக்கரம் ஶ்ரீமந் நாராயணருடைய சின்னமாக அமைந்துள்ளது. இது தீயவர்களை நொடியில் சம்ஹாரம் செய்யும் பேராற்றல் பெற்றுள்ளது. இதை சுற்றியுள்ள வட்டவடிவிலான வானவில் துவக்கமும் முடிவும் இல்லாத நித்திய வாழ்வை (மரணம் இல்லாத பெருவாழ்வை) குறிக்கிறது. ஆறுமுக்குகள் கொண்ட நட்சத்திர வடிவிலான விஷ்ணு சக்கரத்தின் மத்தியில் உள்ள வெண்ணிறமான சூரியன் பூரண தூய்மையக் குறிக்கின்றது. இந்த சுதர்சன சக்கரம் சுழலும் சக்கரமாக திகழ்கின்றது.

7. உலக மக்களுக்கு அன்புக் கொடியின் மூலம் நாம் தெரிவிக்கின்ற உண்மைகள்:

(1) ஶ்ரீமந் நாராயணர், பக்தர்களைக் காக்கவும் துஷ்டர்களை அழிக்கவும், பூமியில் வந்து, அவரது தெய்வீக ஆட்சியினை தொடங்கி விட்டார் என்பதனை தெரிவிக்கின்றோம்.

(2) ஜாதி! மதம்! இனம்! நிறம்! மொழி! தேசம்! முதலிய எல்லைகளையும், பிரிவினைகளையும் கடந்து, மனிதராய் படைக்கப்பட்ட அனைவரையும் ஒரே கொடியின் கீழ், ஆதி மகா யக்ஞத்தில் இணைத்து, ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற மாபெறும் உண்மையினை செயல்மறைப் படுத்துகிறோம்.

(3) இக்கொடி அன்புக் கொடியாக இருப்பதினால் பகவான் படைத்த அனைத்து ஜீவராசிகளையும், மக்களையும் நாம் நூறு சதவீதம் நேசித்து, பரம உபதேசமான ஜீவகாருண்ய ஒழுக்கத்தினை கடைப்பிடிக்கிறோம்.

(4) நமக்கு விரோதமாய் தீய சேனைகள் வரும் போது, நாம் யுத்தம் செய்யாமல் அமைதியாக இருந்து, நமக்காக இறைவன் வைகுண்ட கணங்களைக் கொண்டு வெற்றி தேடி தரும் உண்மையான அஹிம்சா தரமத்தினை கடைப்பிடிக்கின்றோம்.

(5) பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் ராஜாதி ராஜா என்பதனை தெரிவிக்கின்றோம்.

(6) இந்த தெய்வீகக் கொடியின் உண்மையான தாத்பரியத்தை புரிந்து கொண்டு ஒழுகும் மக்களின் பிரார்த்தனைகள் உடனடியாக ஶ்ரீமந் நாராயணரால் கேட்கப்படும் என்பதனை தெரிவிக்கின்றோம்.

(7) இந்த அன்புக்கொடிக்கு விரோதமாக போரிட்டு வெற்றி பெற எவராலும் இயலாது என்பதனை தெரிவிக் கின்றோம்.

(8) பக்தர்கள் அன்புக் கொடியினை ஏன் ஏற்ற வேண்டும்?

அன்புக் கொடி நம்முடைய நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வெற்றியின் சின்னமாக பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அன்று பெறிய முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானை யக்ஞபுருஷரான ஆதி மூலத்தை அழைக்கும் போது ஶ்ரீ மகா விஷ்ணு தமது சுதர்சன சக்கரத்தை கொண்டு காப்பாற்றினார். அதே போன்று இன்று பக்தர்கள் (ஒரு சிறு குழந்தை கூட) துன்பம், துயரம், ஆபத்து வரும் போது, பிரேம பக்தியோடு, கொடியின் நாயகனை (ஆதி புருஷரை) நோக்கி கூப்பிட்டால், அபயம் அளித்து மிகுந்த வெற்றியினைத் தருவார்.

(9) வெற்றி தரும் அன்புக் கொடி:

நிலையான தருமத்தை ஸ்தாபிக்க பாரத புண்ணிய பூமியில் வந்துள்ள பரம புருஷராகிய ஶ்ரீமந் நாராயணர், ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அன்புக் கொடி எங்கெங்கு பறக்கின்றதோ, அங்கு சுபிட்சமும், மிகுந்த வெற்றியும், தேவ நீதியும், மகிமையும் என்றும் நிலைத்திருக்கும்.



இந்த பிரதியானது பகவான் இருபது ஆண்டு காலமாக அளித்த உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.

எல்லாப் புகழும் பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா ஒருவருக்கே உரித்தாகுக!

ஓம் நமோ பகவதே ஶ்ரீ லஹரி கிருஷ்ணாய !!